”உடனடியாக ஒரு காதலி தேவை’’: வீட்டிற்கு வெளியே விளம்பரம் செய்த கனடிய நபர்!!

533

canada_gfriend_003

கனடா நாட்டில் தன்னுடைய முன்னாள் காதலி பிரிந்து சென்றுவிட்டதால் புதிதாக காதலி ஒருவர் தேவை என வீட்டிற்கு வெளியே விளம்பரம் செய்துள்ள நபர் ஒருவரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓண்டாரியோவில் உள்ள லண்டன் நகரை சேர்ந்த Peter Gould (47) என்பவர் தான் இந்த விளம்பரத்தை ஏற்பாடு செய்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியபோது ‘என்னுடைய முன்னாள் காதலி என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இந்த நவீன காலத்தில் ஒரு காதலியை பெறுவது மிகவும் கடினமாக உள்ளது.இணையத்தளங்கள் அல்லது பார்ட்டி நடைபெறும் இடங்களுக்கு சென்று காதலியை தெரிவு செய்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அதனால் தான் என்னுடைய வீட்டிற்கு வெளியே 200 டொலர் செலவில் விளம்பர பலகையை வைத்துள்ளேன்.

என்னுடைய வீடு சிறியதாக இருந்தாலும், அதனை சுத்தமாக வைத்துள்ளேன். என்னுடைய துணிகளை நானே துவைத்து, நானே சமைத்து சாப்பிட்டு வருகிறேன்.என்னிடம் ஒரு மோட்டார் சைக்கிள், வீட்டிள் LCD தொலைக்காட்சி என அனைத்து வசதிகளும் இருக்கிறது.

காதலர் தினத்தை உற்சாகமாக கொண்டாடவும், இந்த நாளின் கடைசியில் என்னுடன் அமர்ந்து பீயர் குடிக்கவும் அழகான ஒரு காதலி தேவை’ என உருக்கமாக பேசியுள்ளார்.இந்த விளம்பரத்தை பார்த்தும் யாரும் வரவில்லை என்றால், தன்னுடைய புகைப்படத்தையும் விளம்பர பலகையில் ஒட்டி மீண்டும் முயற்சி செய்வேன் என கூறியுள்ளார். முக்கியமாக, இந்த விளம்பரத்தை பார்த்தும் வரும் பெண் 35 முதல் 47 வயதிற்குள் இருக்க வேண்டும் என அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.