வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் அனுசரணையின் கீழ் இயங்கி வரும் அருளகம் சிறுவர் இல்லத்தை சேர்ந்தவர்களும் அகிலாண்டேஸ்வரி நுண்கலை கல்லூரி மாணவிகளும் திருமதி சூரியயாழினி வீரசிங்கம் அவர்களின் மாணவிகளுமான ஐந்துபேரது
செல்விகள் : சுபாயினி இராமகவுண்டர்
ரிஷிகா செல்வராசா
தனுஷா சசிகரன்
பிரியதர்சினி குணசேகரன்
தியாணுகா தியாகலிங்கம்
ஆகியோரின் பரத நாட்டிய அரங்கேற்றம் எதிர்வரும் 21.02.2016 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் வவுனியா நகரசபையின் கலாசார மண்டபத்தில் தமிழ்மணி கலாநிதி அகளங்கன் தலைமையில் இடம்பெற உள்ளது .
மேற்படி அரங்கேற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் உயர் நீதிமன்ற நீதிபதி கௌரவ மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் கௌரவ விருந்தினராக வடமாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு.தி.விஸ்வரூபன் அவர்களும்
சிறப்பு விருந்தினர்களாக கலைஞர் வேல் ஆனந்தன்(முதுநிலை ஆடற்கலை ஆற்றுகையாளர் மற்றும் வாடா கிழக்கு மாகாணத்தின் ஒய்வு பெற்ற உதவிகல்வி பணிப்பாளர்)திருமதி அருட்செல்வி கிருபைராஜா (சிரேஷ்ட விரிவுரையாளர் நடனத்துறை யாழ பல்கலைகழகம் )கலாநிதி சர்மிளா ரஞ்சித்குமார் (சிரேஷ்ட விரிவுரையாளர் நடனம் தலைவர் நடன நாடக அரங்கியற்றுறை சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம் கிழக்கு பல்கலைகழகம் மட்டக்களப்பு )ஆகியோர் கலந்து கொள்கின்றனர் .






