ஆபத்தான இடங்களில் செல்பி எடுத்தால் அபராதம்!!

551

Selfie

மும்பையில் ஆபத்தான இடங்களில் செல்பி எடுத்தால் அபராதம் விதிக்க மும்பை பொலிசார் முடிவு செய்துள்ளனர்.மும்பையில் பாந்திரா பாண்டு ஸ்டாண்டு கடற்கரை உள்பட 15 இடங்களில் செல்பி எடுப்பதற்கு தடை விதிக்க மும்பை பொலிசார் முடிவு செய்துள்ளனர்.

மேலும் தடையை மீறி ஆபத்தான இடங்களில் செல்பி எடுப்பவர்களுக்கு ரூ. 1,200 அபராதம் விதிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.துணை பொலிஸ் கமிஷனர் சஞ்சய் கடம் கூறுகையில், மக்களின் நலனிற்காகவே அபராதம் விதிக்க திட்டமிட்டுள்ளோம்.மேலும் செல்பிக்கு தடை விதித்த பகுதிகளில் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளோம்.

செல்பி மோகத்தால் உயிரிழப்பதை தடுக்கவே நடவடிக்கை எடுத்து வருகிறோம் என கூறியுள்ளார்.சமீப காலமாக செல்பி ஆபத்தான இடங்களில் செல்பி எடுக்க முயன்ற பலர் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.