வவுனியா ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்ட பகுதியில் உள்ள ஸ்ரீநாகபூசனி அம்மன் ஆலயத்தில் பட்டப்பகலில் உண்டியல் உடைத்து திருடப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது..
நேற்று முன்தினம் (15.02) மாலை ஆலயத்திற்கு வழமைபோல் சென்ற பக்தர்கள் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை அவதானித்தனர். இவ்விடயம் உடனடியாக ஓமந்தை பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. ஓமந்தை பொலிசார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர்
மேலும் ஏற்கனவே இவ்வாலயத்தில் உண்டியல் உடைக்கப்பட்டு அவ்விடயம் ஊர்மக்களால் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டு அங்கு பொலிசாரின் பாதுகாப்பும் ரோந்து நடவடிக்கையும் தினமும் முன்னெடுக்கப்பட்ட நிலையில் பகலில் இவ் உண்டியல் உடைக்கப்பட்டு பல்லாயிரம் ரூபாக்கள் திருடப்பட்டமையால் பொலிசார் மீது அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.