
ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுட்டதாக கூறப்படும் பெண்ணொருவர் கிரான்பாஸ் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு கிடைக்கபெற்ற தகவலின் அடிப்படையிலேயே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இதன்போது சந்தேகநபர் வசமிருந்து 11 கிராம் 480 மில்லிகிராம் ஹெரோயின் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதேவேளை கைதான பெண் வெல்லம்பிடிய பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. இவரை இன்று மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.





