சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற இருவர் கைது!!

557

1 (26)

யாழ்ப்­பாணம் கொட்­டடி பகு­தியில் பத்து வயது சிறு­மி­யொ­ரு­வரை பாலியல் துஷ்பி­ர­யோகம் செய்ய முயன்ற இரு­வரை கைது செய்­துள்­ள­தாக யாழ் பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு உப பொலிஸ் பரி­சோ­தகர் எஸ்.சிறி­கஜன் தெரி­வித்­துள்ளார்.

இச் சம்­பவம் தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

கொட்­டடி குளி­யா­வடி பகு­தியில் நேற்று முன்­தினம் மாலை 6 மணி­ய­ளவில் குறித்த சிறுமி புல­மைப்­ப­ரிசில் பரீட்­சைக்­காக தனியார் கல்வி நிறு­வ­னத்­திற்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்­டி­ருக்கும் போது இருவர் சிறு­மியை ஆசை வார்த்­தைகள் கூறி அழைத்து தமது அறைக்கு கூட்டிச் சென்று சிறு­மியை துஷ்­பி­ர­யோகம் செய்ய முயன்­றுள்­ளனர். இத­னை­ய­டுத்து சிறுமி அச்­ச­ம­டைந்து அழு­த­வாறு வெளியே ஒடி வர முற்­பட்ட போது சிறு­மிக்கு 70ரூபா பணத்தை கொடுத்து அனுப்­பி­யுள்­ளனர்.

இதன் பின்னர் அவ்­வி­டத்­திற்கு சிறு­மியின் பெற்றோர் சென்று பார்த்த போது இரு­வரும் வீட்­டினுள் மறைந்­தி­ருந்­துள்­ளனர். உட­ன­டி­யாக பொலி­ஸா­ருக்கு தகவல் தெரி­விக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து குறித்த நபர்கள் இரு­வரும் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். கைது செய்­யப்­பட்­ட­வர்­களில் ஒருவர் அல்­லைப்­பிட்­டியில் உணவு விடு­தி­யொன்றை நடாத்­தி­வரும் ஜேர்மன் பிர­ஜா­வு­ரி­மை­யாளர் என்றும் மற்­றை­யவர் ஈச்­ச­மோட்டைப் பகு­தியைச் சேர்ந்தவர் என்றும் இவர்கள் இரு­வரும் நிரம்­பிய மது போதையில் காணப்­பட்­ட­தா­கவும் குறித்த பகு­தியில் தொடர்ச்­சி­யாக வேறு பல பெண்­க­ளு­டனும் சேட்­டை­களில் ஈடு­பட்டு வந்­த­தா­கவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும் யாழ். பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் தெரிவித்துள்ளார்.