
நடிகைகள் அரசியலுக்கு வருவது ஒன்றும் அரிதான விஷயம் அல்ல. காலம் காலமாக பல நடிகைகள் அரசியலில் ஜெயிக்கத்தான் செய்திருக்கிறார்கள்.இப்போது தனுஷ் நடிக்கும் கொடி படத்தில் நடித்துவரும் த்ரிஷா, அதில் அரசியல்வாதியாக நடிக்கிறாராம்.
படபிடிப்பிற்காக த்ரிஷா படத்துடன் ஒரு பிரம்மாண்ட பேனர் வைத்திருந்தனர். அதன் மூலம் இந்த செய்து கசிந்துள்ளது.துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக த்ரிஷா மற்றும் ப்ரேமம் புகழ் அனுபமா நடிக்கின்றனர்.





