மனிதர்களால் உருவாக்கப் பட்ட அனைத்துத் தரவுகளை யும் பல பில்லியன் ஆண்டுகளுக்கு பாதுகாப்பாக சேமிக்கக் கூடிய அதி உன்னத சேமிப்பு முறைமையொன்றை உருவாக்கியுள்ளதாக பிரித்தானிய சவுதாம்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உரிமைகோரியுள்ளனர்.
சூப்பர்மேன் நினைவக பளிங்கு என அழைக்கப்படும் சேமிப்பு முறைமையில் தரவுகள் கண்ணாடிப் பளிங்கில் 3 மிக நுண்ணிய கட்டமைப்புப் படலங்களில் லேசர் கதிரைப் பயன்படுத்தி 5 பரிமாண கட்டமைப்புகளில் பதிவு செய்யப்படுகின்றன.
190 பாகையுடைய இந்த சேமிப்பு முறைமையானது 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு தரவுகளை எதுவித பாதிப்பும் இல்லாமல் பாதுகாக்கக் கூடியதாகும். அத்துடன் இந்த சேமிப்பு கண்ணாடிப் பளிங்கு 1,000 பாகை செல்சியஸ் அளவான கடும் வெப்ப நிலையை தாங்கிக் கொள்ளக் கூடிய வல்லமையைக் கொண்டது.