வவுனியா விவசாயக் கல்லூரியின் 27வது ஆண்டு நிறைவை முன்னிட்டும் அகில இலங்கை விவசாயக் கல்லூரியின் 100 ஆவது ஆண்டை முன்னிட்டும் வவுனியா விவசாயக் கல்லூரியில் விவசாய கண்காட்சி நிகழ்வு இன்று (18.02.2016) காலை 10.00 மணிமுதல் நடைபெற்று வருகின்றது.
இன் நிகழ்வானது தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறும். பாடசாலை மாணவர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பார்வைக்காக அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்விவசாய கண்காட்சியில் விவசாய பயிற்றுவிப்பாளர்களால் பார்வையிடுவோருக்கு விளக்கங்கள் அளிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.






