மூன்று பிள்ளைகளின் தந்தை நஞ்சருந்தி தற்கொலை!!

748

suicide

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட ஒட்டடி தோட்டத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை நஞ்சருந்திய நிலையில் உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.ஒட்டரி ஒத்தலயம் தனியார் தோட்டத்தை சேர்ந்த 53 வயதுடைய ஜே.சுப்பிரமணியம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை நஞ்சருத்திய நிலையில் தனது வீட்டிற்கு சென்ற வேலையில், வீட்டார் உடனடீயாக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.மரணம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.