வௌிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களும் ஆலோசனை வழங்க அழைப்பு!!

623

HUman

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்திற்கு வௌிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களும் தமது ஆலோசனைகளை வழங்க முன்வருமாறு ஜெனீவா தீர்மானம் குறித்து ஆலோசனைகளை பெறுவதற்கு நியமிக்கப்பட்ட குழு தெரிவித்துள்ளது.

ஆலோசனை செயலணி குழு தற்போது மக்கள் கருத்துக்களை பெற்று வருவதுடன் அண்மையில் வடக்கு மக்களின் கருத்துக்களை பெற்றிருந்தது.

இதன்போது அந்தப் பிரதேசத்தில் பணியாற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளிடமும் அந்தக் குழு ஆலோசனைகளை பெற்றிருந்தது. இதுதவிர முப்படைத் தளபதிகளையும் சந்தித்து ஆலோசனைகளை பெற்றுள்ளது.

அத்துடன் அந்த குழு கொழும்பில் அடிமட்ட அளவில் பேச்சுவார்த்தைகளை நடத்தவும் தீர்மானித்துள்ளதுடன் ஏனைய மாவட்டங்களிலும் மக்களிடம் கருத்துக்களை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆலோசனை செயலணி குழு தெரிவித்துள்ளது.

அதேவேளை ஆலோசனைகளை வழங்க விரும்பும் எவரும் www.slrm.gov.lk என்ற இணையத்தளத்தினூடாகவும் தமது ஆலோசனைகளை வழங்க முடியும் என்று அந்தக் குழுவின் செயலாளர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார்.