வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தின் ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்குக்கான இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி நேற்று (18.02.2016) வியாழக்கிழமை பிற்பகல் பாடசாலை மைதானத்தில் அதிபர் சுப்பையா அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
நேற்றைய நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராசா, எம்.பி.நடராஜ், இ.இந்திரராசா ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக சி.கணேசபாதம் (உதவிக் கல்விப்பணிப்பாளர் ஆரம்பபிரிவு) ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
படங்கள் : சுதன்






