
ஹோமாகம நகரிலுள்ள தனியார் வங்கியொன்றின் வாடிக்கையாளர் ஒருவரிடம் கொள்ளையடிக்க முயற்சித்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த வாடிக்கையாளர் இன்று (19.02) வங்கியில் இருந்து ஒரு தொகை பணத்தை மீளப் பெற்றுக் கொண்டு தனது வாகனத்தில் ஏற முற்பட்ட போது அவரிடம் இருவர் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர்.
இதன்போது வாடிக்கையாளர் சத்தமிட்டதையடுத்து வங்கியின் பாதுகாப்பு ஊழியர்கள் உட்பட அருகில் இருந்தவர்கள் அங்கு கூடியதனால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
எனினும் அங்கிருந்தவர்களின் உதவியுடன் கொள்ளையடிக்க வந்த இருவரையும் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.





