திருமணவிழா கொண்டாட்டம் : துப்பாக்கியால் சுட்டதில் மணமகன் பரிதாபமாக பலி!!(வீடியோ)

692

INDI

உத்திரபிரதேசத்தில் நடைபெற்ற திருமணவிழா ஒன்றில் மணமகன் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்திர பிரதேசத்தில் நேற்றிரவு திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தபோது, அதில், கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அடையாளம் தெரியாத சிலர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

அது மணமகனை அமீத் ரஸ்தோகியை தாக்கியது. இதனை தொடர்ந்து லக்னோ நகரில் உள்ள மருத்துவ மையத்திற்கு உடனடியாக ரஸ்தோகி கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவர் மரணமடைந்து விட்டார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது பற்றி பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்செயலாக நடந்த துப்பாக்கி சூட்டில் பலியாகி விட்டாரா என விசாரணை நடத்தப்பட உள்ளது.