
திக்வெல்ல, சுதுவெல்ல பிரதேசத்தில் கோடாரியால் அடித்து பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். திக்வெல்ல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணின் கணவர் இந்த கொலையை செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சுதுவெல்ல, மெதகொட பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடைய பெண்ணொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.கொலையை செய்த சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதால் அவரை கைது செய்வதற்காக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





