கடனை திருப்பிச்செலுத்த முடியாமையால் கப்பல்களை விற்பனை செய்யும் இலங்கை!!

745

Ceylon-Shipping-Cooperation

கடனை திருப்பி செலுத்தமுடியாத காரணத்தால் இலங்கை சீனாவிடம் இருந்து கொள்வனவு செய்த இரண்டு கப்பல்களை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சிலோன் சிப்பிங் கோப்ரேசன் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

சீனாவில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட இரண்டு கப்பல்களும் நாட்டின் காரீய போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டன.இவை இரண்டும் கடந்த ஒக்டோபரிலும் இந்த வருட ஜனவரியிலும் கொள்வனவு செய்யப்பட்டவையாகும்.

எனினும், இதற்காக மக்கள் வங்கியில் இருந்து பெறப்பட்ட கடனை திருப்பிசெலுத்த முடியாமை காரணமாக அவற்றை தனியார் துறையினரும் இணைந்து செயற்படுத்துவதற்கு அல்லது விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.