
பலாலி விமானப்படை முகாமில் பணியாற்றிய சிப்பாய் ஒருவர் தனது துப்பாக்கி மூலம் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று இரவு குறித்த முகாமில் பணி புரிந்து கொண்டிருந்த அவர், இன்று அதிகாலை 04.40 அளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இவ்வாறு பலியானவர் காலி – கராகொட பகுதியைச் சேர்ந்த 23 வயதானவர் எனத் தெரியவந்துள்ளது.





