20 அடி உயரத்தில் இருந்து விழுந்து குடும்பஸ்தர் பலி!!

508

1 (44)

கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பகமுவ பிரதேச சபைக்கு அருகில் உள்ள பண்டாரநாயக்கபுர எனும் பகுதியில் 20 அடி உயரத்தில் இருந்து விழுந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று (21) இரவு இடம்பெற்றிருக்கலாம் என கினிகத்தேனை பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், இவ்வாறு உயிரிழந்தவர் கினிகத்தேனை – பண்டாரநாயக்கபுர பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை (45) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் விழுந்து கிடப்பதை கண்ட அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கினிகத்தேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட பின் சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி சட்ட மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரியவருகின்றது. இதேவேளை, இது ஒரு விபத்தா அல்லது கொலையா என்ற கோணத்தில் கினிகத்தேனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.