பெண் ஆசிரியர் மீது 36 பாலியல் புகார்கள்: கனடாவை அதிர வைத்த சம்பவம்!!

502

ontario_teacher_002

கனடா நாட்டில் உள்ள பாடசாலையில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த பெண் ஒருவர் தன்னுடைய மாணவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக 36 புகார்கள் பதிவானதை தொடர்ந்து அவரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள ஸ்டெர்லிங் நகரில் Jaclyn McLaren(36) என்ற பெண் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

ஹாஸ்டிங்ஸ் மற்றும் பிரின்ஸ் எட்வார்ட் மாவட்ட பள்ளியில் கடந்த 2008ம் ஆண்டு ஆசிரியராக சேர்ந்த அந்த பெண் மாணவர்களுக்கு பிரெஞ்ச் மொழியை கற்றுக்கொடுத்து வந்துள்ளார்.இந்நிலையில், கடந்த 14ம் திகதி இந்த ஆசிரியர் மீது பல்வேறு பாலியல் புகார்கள் பதிவானது. அதாவது, 16 வயதுக்கு கீழ் உள்ள மாணவன் மீது பாலியல் தாக்குதல் நடத்தியது, மாணவனிடம் பாலியல் ரீதியாக குறுக்கீடு செய்தது, மாணவர்களிடம் பாலியல் உணர்வுகளை தூண்டியது, மாணவர்களிடம் பாலியல் உறவுகளை பிரதிபலிக்கும் படங்களை காட்டியது உள்ளிட்ட 36 புகார்கள் பதியப்பட்டது.

இந்த குற்றங்கள் அனைத்தும் 2013ம் ஆண்டில் இருந்து 2016ம் ஆண்டு வரை நடந்துள்ளது.இந்த புகார்கள் அனைத்தும் உறுதி செய்யப்பட மறுநாள், அதாவது பெப்ரவரி 15ம் திகதி பெண் ஆசிரியரை பொலிசார் அதிரடியாக கைது செய்தனர்.இந்த வழக்கு தொடர்பான முதல் விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்தபோது பெண் ஆசிரியர் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

வழக்கினை விசாரணை செய்தபோது தனக்கு பிணை வேண்டி பெண் ஆசிரியர் மனு தாக்கல் செய்தார்.இதனை விசாரணையில் எடுத்துக்கொண்டு 1,00,000 டொலர் ரொக்க பிணையில் நீதிபதி தற்காலிகமாக விடுதலை செய்துள்ளார்.மேலும், எதிர்வரும் மார்ச் 31ம் திகதி இந்த வழக்கு தொடர்பான மறு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.