104 வயது மூதாட்டியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற பிரதமர் மோடி!! (வீடியோ இணைப்பு)

453

40136815 (1)

பிரதமர் மோடி நிகழ்ச்சி மேடையில், 104 வயது மூதாட்டியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம், நயா ராய்ப்பூரில் பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தருவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றுள்ளது.இந்த நிகழ்ச்சியில், தன் வீட்டில் இருந்த ஆடுகளை விற்று கழிப்பறை கட்டிய 104 வயது குன்வர் பாய் என்ற மூதாட்டியை மோடி கௌரவித்துள்ளார்.குன்வருக்கு சாலை அணிவித்து கௌரவித்த மோடி, பின்னர் அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார்.

அப்போது, தன்னைப் பற்றி அதிகம் செய்தி வெளியிடாமல், இந்த மூதாட்டி குறித்து செய்தி வெளியிட்டு, அவர் செய்துள்ள நற்செயலை தேசம் அறியச் செய்யுங்கள் என ஊடகங்களிடம் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.சத்தீஸ்கரில் ஒரு குக்கிராமத்தில் வசித்து வரும் இந்த மூதாட்டி தொலைக்காட்சி பார்ப்பது இல்லை; செய்தித்தாள்களையும் வாசிப்பது இல்லை.

எனினும், துய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறை கட்ட வேண்டும் என்ற தகவல் அவரை எப்படியோ சென்றடைந்துள்ளது. நாடு மாற்றமடைந்து வருகிறது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் என்றும் இவர் அனைவருக்கும் வழிகாட்டியாகத் திகழ்கிறார் எனவும் மோடி பாராட்டியுள்ளார். மோடி மேலும் இந்த நிகழ்ச்சியில் பேசுகையில், இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல், புதிய வேலைவாய்ப்புகளை மற்றவர்களுக்கு அளிப்பவர்களாக இருக்க ஆசைப்பட வேண்டும்.

முத்ரா திட்டத்தின்கீழ் புதிய தொழில்முனைவோர்கள் உருவாக்கப்பட்டு வருகின்றனர். நமது நாடு சுதந்திரமடைந்து சுமார் 70 ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போதும் 5 கோடி குடும்பங்களுக்கு தங்கிக்கொள்ள வீடு இல்லை. வீடற்ற இந்த ஏழை மக்களில் 2 கோடி பேர் நகரங்களிலும், 3 கோடி பேர் கிராமங்களிலும் வசிக்கின்றனர்.

நமது நாடு 2022ம் ஆண்டில் 75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும். அப்போது நமது தேசம் எந்த நிலையில் இருக்க வேண்டும் என்பதை ஒவ்வோர் இந்தியரும் எண்ணிப் பார்க்க வேண்டும்.2022ம் ஆண்டில் நாட்டில் உள்ள வீடற்ற ஏழைகளுக்கு 5 கோடி வீடுகளைக் கட்டிக் கொடுக்க வேண்டும்.

இதனை உறுதிசெய்ய மத்திய, மாநில அரசுகள் இணைந்து பாடுபட வேண்டும். இது சாதாரண உள்கட்டமைப்புத் திட்டமல்ல; நமது நாட்டின் ஏழை,எளிய மக்களின் கனவை வலுப்படுத்தும் திட்டம். இத்திட்டத்தைச் செயல்படுத்தும்போது அதன் தொடர் நடவடிக்கையாக, புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என பேசியுள்ளார்.