வவுனியாவில் இடம்பெற்ற ஐவரின் மிகப்பிரமாண்டமான பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்வு !!(படங்கள்)

1169

 

வவுனியாவில் முதல்முறையாக  பிரம்மாண்டமான முறையில் வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேவரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் அனுசரணையின் கீழ் இயங்கிவரும் அருளகம் சிறுவர் இல்லத்தினராலும்  ஆலய அறங்காவலர் சபையினராலும்  ஏற்பாடு செய்யப்பட்ட ஐந்துமாணவிகளது   பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்வு  வவுனியா நகரசபையின் புதிய கலாசார மண்டபத்தில் நேற்றுமுன்தினம்  21.02.2016 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில்  வவுனியா  மாவட்ட கலை இலக்கிய  வரலாற்றில்  இதுவரையில் நடைபெற்றிராத  அல்லது கண்டிராத அளவுக்கு நிகழ்வு தொடங்கியது முதல்  ஒன்பது மணியளவில் நிகழ்வு நிறைவு பெறும்வரை அரங்கு நிறைந்த மக்கள்  கூட்டம் ஒன்று திரண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 தமிழ்மணி அகளங்கன் தலைமையில் இடம்பெற்ற அரங்கேற்ற நிகழ்வில்  வவுனியாவின் பலபகுதிகளிலும் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கலந்துகொண்ட கலை இலக்கியவாதிகள் மேதைகள் பேராசிரியர்கள்  மற்றும் பலகலைகழக  மற்று சிறுவர் இல்லங்களை சேர்ந்த சிறுவர் சிறுமியர்  நீதிமன்ற நீதிபதிகள் சட்டத்தரணிகள் பொறியியலாளர்கள்  இசை நடனத்துறைகளை சார்ந்த ஆசிரியர்கள் வர்த்தக பிரமுகர்கள் என  அரசியல்வாதிகள்  எனப்பல்வேறு தரப்பையும் உள்ளதாகிய மக்கள்கூட்டம் அரங்கு நிறைந்து  காணப்பட்டது .

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் அனுசரணையின் கீழ் இயங்கி வரும் அருளகம் சிறுவர் இல்லத்தை சேர்ந்தவர்களும் அகிலாண்டேஸ்வரி நுண்கலை கல்லூரி மாணவிகளும் நிருத்தியநிகேதன  நுண்கலை கல்லூரியின்   ஸ்தாபகர்  திருமதி சூரியயாழினி வீரசிங்கம்  அவர்களின் மாணவிகளுமான

செல்விகள் : சுபாயினி இராமகவுண்டர்

                          ரிஷிகா செல்வராசா

                          தனுஷா சசிகரன்

                         பிரியதர்சினி குணசேகரன்

                        தியாணுகா தியாகலிங்கம்

ஐந்து பேரது பரத நாட்டிய அரங்கேற்றம் ஒரே மேடையில்  இடம்பெற்றமை  குறிப்பிடத்தக்கது.

மேற்படி அரங்கேற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக  யாழ் உயர் நீதிமன்ற நீதிபதி கௌரவ மாணிக்கவாசகர் இளஞ்செழியன்  மற்றும் கௌரவ விருந்தினராக வடமாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின்  பணிப்பாளர் திரு.தி.விஸ்வரூபன்  மற்றும்சிறப்பு விருந்தினர்களாக கலைஞர் வேல் ஆனந்தன்(முதுநிலை ஆடற்கலை ஆற்றுகையாளர்  மற்றும் வட கிழக்கு மாகாணத்தின் ஒய்வு பெற்ற உதவிகல்வி பணிப்பாளர்)திருமதி அருட்செல்வி கிருபைராஜா (சிரேஷ்ட விரிவுரையாளர் நடனத்துறை யாழ பல்கலைகழகம் )கலாநிதி சர்மிளா ரஞ்சித்குமார் (சிரேஷ்ட விரிவுரையாளர் நடனம் தலைவர் நடன நாடக அரங்கியற்றுறை சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம் கிழக்கு பல்கலைகழகம் மட்டகளப்பு )ஆகியோர் கலந்து கொண்டனர் .

மேற்படி நிகழ்வின் போது ஆரம்பம் முதல் இறுதி வரை  இருக்கையில் அமர்ந்திருந்து அனைத்து மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்வுளையும் கண்டுகளித்து இறுதியில்  அனைவர் நெஞ்சையும் நெகிழ வைத்த  வகையில் யாழ் உயர் நீதிமன்ற நீதிபதி  இளஞ்செழியன்  அவர்கள் உரையாற்றினார்கள்.

நீதிபதி அவர்களது உரையில்  வவுனியாவில்தான் சேவையாற்றிய  காலப்பகுதியில் ஏராளமான சிறுவர் சிறுமியரை இந்த அருளகத்தில் இணைத்ததாகவும் அவர்களில் சிலர் தான் இன்றைய அரங்கேற்றத்தில் பங்கு கொண்ட மாணவிகள் எனவும் இந்த அருளகத்தின் குழந்தைகளுக்கு  தானே சட்ட ரீதியான தந்தை மற்றும் சட்டரீதியான பாதுகாவலன் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

அதேபோன்று கோவில்நிர்வாகம் மற்றும் அறங்காவலர் சபையினரது அர்ப்பணிப்புள்ள மற்றும் சமூக பொறுப்புள்ள  சேவையும் அகிலாண்டேஸ்வரியின்  அருளாசியும்  தொடர்ந்து  இவர்களுக்கு கிடைக்கவேண்டும்    எனவும் வேண்டிக்கொண்டார்.

மேலும் வவுனியா நிருத்தியநிகேதன ஸ்தாபகர்   சூரியாழினி  வீரசிங்கத்தின் நேர்த்தியான நெறியாள்கையை பாராட்டியதோடு  தமிழ்மணி அகளங்கன் அவர்களின்  வழிநடத்தலையும் பாராட்டினார் .

தொடர்ந்து   அரங்கேற்ற நிகழ்வுக்கு வாய்ப்பாடு வழங்கிய  சிவமைந்தனையும்  அவருடன் இணைந்த பக்கவாத்திய கலைஞர்களையும்  பாராட்டி அவர்களுக்குரிய  கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது ….

படங்கள்:கஜன் 

561424_642388559235048_8533939274604657910_n 1933953_642397465900824_4369673299518838995_n 10372555_642382792568958_2237806835033280058_n 10376172_642381292569108_6544123680642552372_n 10400255_642379915902579_109710563813277109_n 12111928_642379435902627_5813390917554991733_n 12705686_642380065902564_6023869637408010843_n 12715792_642394679234436_5252713824832345875_n 12717189_642379722569265_8517353889654559555_n 12717244_642379542569283_1637369728499020388_n 12717541_642392105901360_927215103935065243_n 12717739_642380365902534_7826018674755898505_n 12718345_642379309235973_5912259638766956785_n 12718355_642379039236000_7279343091991996966_n 12729251_642379165902654_4948349488651561074_n 12729394_642381455902425_9084789883185862798_n 12733558_642380025902568_3822495320457130111_n 12733655_642396992567538_4868188979430347629_n 12733966_642397862567451_2057156217177828123_n 12734009_642387152568522_5900884625315964602_n 12734226_642379205902650_299809486233144899_n 12741892_642389935901577_4463885025335954696_n 12742049_642381689235735_9002360047076008276_n 12742180_642379869235917_7055961458711527279_n 12742304_642380529235851_8145094403268840232_n 12742344_642379115902659_9131843379176171886_n 12742457_642380105902560_5050890697896593959_n 12742509_642381279235776_4514713745233836219_n 12742539_642388072568430_4054351256673165110_n 12742729_642395505901020_1212927360342051204_n 12743504_642394282567809_3748779137260384480_n 12743564_642379129235991_7367422634286943318_n 12743788_642380822569155_7369944385897383411_n 12743909_642395719234332_2326399221302148111_n 12743919_642393952567842_8365550017648336766_n 12744084_642379752569262_964666815331999432_n 12744258_642379699235934_5192500640391986914_n 12744281_642396472567590_6998389468620084174_n 12744489_642396085900962_7017761533351968744_n 12744571_642381032569134_598051155943078098_n 12744645_642390055901565_4848683294041651061_n 12745443_642380629235841_4852180591089166929_n 12745652_642391315901439_4155099733328465659_n