
கடலுக்கு அரசனாக திகழும் திமிங்கலங்கள் கரைகளில் செத்து ஒதுங்குவது சமீபகாலமாகவே உலகின் பல பகுதிகளிலும் நடந்து வருகிறது.அது திமிங்கல இனத்துக்கான பாதிப்பாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியாது. எங்கேயோ இயற்கையில் ஏற்பட்டுள்ள பழுது என்பதுதான் சரியான பார்வை.
சமீபத்தில், 81 குறுகிய திருக்கை வகை திமிங்கலங்கள் உயிருக்கு போராடிய நிலையிலும் இறந்தும் தமிழக கடற்கரை மாவட்டமான தூத்துக்குடியில் உள்ள மணப்பாடு கிராமத்துக்குரிய கடற்கரை பகுதியில் ஒதுங்கியது.இது இந்திய மக்களுக்கும் அரசுக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





