
இது தொடர்பில் அச்சங்கம் மேலும் குறிப்பிடுகையில்,
இணையதள வசதிக்காக ஒவ்வொரு பாடசாலையும் மாதாந்தம் 7 ஆயிரம் ரூபா முதல் 9 ஆயிரம் ரூபா வரை கட்டணமாகச் செலுத்த வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகை அசாதாரணமானது எனவும், மாதாந்தம் 1,500 ரூபாவே நியாயமான கட்டணம் எனவும் அண்மையில் கல்வியமைச்சர் கருத்து தெரிவித்திருந்தார். 1,500 ரூபா கட்டணத்துக்கு அமைவாக புதிய ஒப்பந்தமொன்று செய்துகொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்திருந்த போதிலும் அது நிறைவேறவில்லை.
அத்துடன், மாதாந்தம் 7,000 9,000 ரூபா வரை கட்டணம் செலுத்துவதற்காக செய்யப்பட்டிருந்த பழைய ஒப்பந்தம் மோசடியானது எனவும், அது தொடர்பில் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கல்வியமைச்சர் தெரிவித்திருந்தார். எனினும் அந்த விசாரணையும் நடைபெறவில்லை.
எவ்வாறாயினும் இந்த இணையதளத் தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதால் இலட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே, இவ்விடயத்தில் கல்வியமைச்சு உடனடியாகத் தலையிட்டு உரிய தீர்வுகளை வழங்க வேண்டும் – என்று இலங்கை ஆசிரியர் சங்கம் அவசர வேண்டுகோளொன்றை விடுத்துள்ளது.





