இந்திய அம்புலன்ஸ் சேவையை பெற்றுக்கொள்வதற்கு சபையில் எதிர்ப்பு !!

488

13092012010059_traveller_ambulance

இந்­தி­யா­வி­ட­மி­ருந்து அம்புலன்ஸ் சேவையை பெற்றுக் கொள்­வது தொடர்பில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை சபையில் பிர­த­ம­ருக்கும் எதிர்­க்கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கும் இடையே கடும் வாதப்­பி­ர­தி­வா­தங்கள் இடம்­பெற்­றன.

இதன்­போது இலங்­கையில் இவ்­வா­றா­னதோர் சேவையை வழங்­கு­வ­தற்கு எவ­ரா­வது இருந்தால் அவர்­களை இச் சபையில் அறி­விக்­கவும் என்று பிர­தமர் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்றம் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய தலை­மையில் கூடி­யது. இதன்­போது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சபையில் விசேட அறிக்­கை­யொன்றை விடுத்து உரை­யாற்­றினார்.

இதன் பின்னர் பந்­துல குண­வர்த்­தன எம்.பி. கேள்­வி­யொன்றை எழுப்­பினார்.

அக் கேள்­வியில் இந்­தி­யா­வுடன் உடன்­ப­டிக்கை செய்து கொள்­வ­தற்கு முன்­ப­தாக இந்­தி­யாவில் அரச சார்­பற்ற நிறு­வ­ன­மொன்­றிற்கு இலங்­கையில் அம்புலன்ஸ் சேவை ஒன்றை நடத்­து­வ­தற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது. இது எந்த அடிப்­ப­டையில் வழங்­கப்­பட்­டது என பிர­த­ம­ரிடம் கேள்வி எழுப்­பினார்.

இதற்கு பதி­ல­ளித்த பிர­தமர்.

இலங்­கையில் இவ்­வி­த­மா­னதோர் சேவையை வழங்­கு­வ­தற்கு எவரும் இல்லை. அப்­ப­டி­யி­ருந்தால் அறி­வி­யுங்கள்.

இந்­தி­யாவில் விசே­ட­மாக கிரா­மங்­களில் அவ­சர மருத்­துவச் சேவையை வழங்க அம்­பி­யூலன்ஸ் சேவை இடம்­பெ­று­கி­றது.

அதே­போன்று அவ­சர மோட்டார் சைக் கிள் சேவை­களும் இயங்­கு­கின்றன.

எனவே எமது கிரா­மங்­க­ளிலும் இந்தச் சேவையை வழங்­கு­வ­தற்கே நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­கிறோம்.

இதற்கு இந்­திய அரசு பணம் செல­வ­ழிக்­கின்­றது. உங்கள் ஆட்­சியில் சுகா­தா­ரத்­திற்­கான நிதி குறைக்­கப்­பட்­டது. நோயா­ளர்­களை கொலை செய்ய வேண்­டு­மென்றா கூறு­கின்­றீர்கள். நாம் நோயா­ளர்­களை கொலை செய்­ய­மாட்டோம். அதற்கு தயா­ரில்லை என்றும் பிர­தமர் தெரி­வித்தார்.

இதன் போது சபையில் எழுந்த ஜே.வி.பி எம்.பி. அநுர திஸா­நா­யக்க தற்­போது இலங்­கையில் இந்­தி­யாவின் 100 அம்­பு­லன்ஸ்கள் இயங்க ஆரம்­பித்­துள்­ளன. அதற்கு பணம் வழங்­கப்­ப­டு­கி­றதா? இல்­லை­யென்றால் அது பரி­சாக வழங்­கப்­பட்­டுள்­ளதா? என கேள்வி எழுப்­பினார்.

இதற்கு பதி­ல­ளித்த பிர­தமர் அச் சேவை­களின் சேவை கொடுப்­ப­னவு வழங்­கப்­ப­டு­கின்­றது என்றார்.

அநுர திஸா­நா­யக்க எம்.பி கேள்விக் கோரல் இல்­லாமல் இச் சேவை பெற்றுக் கொள்­ளப்­பட்­டுள்­ளதா எனக் கேட்­ட­போது,

பிர­தமர் தனது பதிலில் இது தொடர்­பான முழுத் தக­வல்­களை அச் சபைக்கு விரைவில் வழங்­குவோம். இதன் போது எதிர்த் தரப்­பினர் மீண்டும் இலங்­கையில் இவ்­வா­றான அம்­புலன்ஸ் சேவையை வழங்க எவரும் இல்­லையா?. ஏன் இந்­தி­யாவின் சேவையை பெற­வேண்டும் எனக் கேள்­வி­யெ­ழுப்­பினர்.

இதன்­போது பதி­ல­ளித்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, இன்று இட­து­சா­ரிகள் எனத் தம்மை அடை­யாளம் காட்டிக் கொள்வோர். முத­லா­ளித்­து­வத்தை பாது­காக்கும் பாது­கா­வ­லர்­க­ளா­கவே செயற்­ப­டு­கின்­றனர்.

என்னிடம் திருடர்கள் தொடர்பான பைல்கள், தகவல்கள் உள்ளன. திருடர்களின் பெயர்களை வெளியிடலாம். ஆனால் நான் அதனை செய்யவில்லை.

கடந்த காலங்களில் நோயாளர்களை கொன்ற சுகாதாரத்திற்கு நிதியை குறைத்த இலவச சுகாதார சேவையை இல்லாமல் செய்தவர்களே இன்று அம்புலன்ஸ் சேவை தொடர்பாக பேசுகின்றார்கள்.