கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய இருவர் கைது!!

568

1 (19)

கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய 15 வயது சிறுவன் மற்றும், 20 வயது இளைஞன் ஒருவனையும் தலவாக்கலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.மேலும் இவர்கள் தலவாக்கலை பிரதேசத்திலுள்ள நான்கு கோவில்களின் உண்டியல்களை உடைத்து இவ்வாறு பணம் திருடியுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்ததாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்த திருட்டு சம்பவத்துடன் குறித்த 15 வயது சிறுவனின் தந்தையும் தொடர்புபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பொதுமக்களால் வழங்கப்பட்ட இந்த முறைப்பாட்டிற்கு அமைய குறித்த சிறுவனையும்,மேலும் 20 வயதான மற்றுமொரு இளைஞனையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இதேவேளை, குறித்த சிறுவனின் தந்தை அந்தப்பிரதேசத்திலிருந்து தப்பிச்சென்று தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் குறித்த சந்தேகநபர்களால் திருடப்பட்ட நாணயங்கள் தலவாக்கலை நகரிலுள்ள கடையொன்றில் பணமாக மாற்ற முயற்சித்தப் போதே இவர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.