ஆசியக் கிண்ண கிரிக்கட் தொடர் இன்று ஆரம்பம் : எதிர்பார்ப்புடன் களமிறங்கும் இலங்கை அணி!!

497

AsiaCup2016_Large

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடர் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் இன்று புதன்கிழமை (24.02) ஆரம்பமாகிறது.

இன்றைய முதல் நாள் போட்டியில் இந்திய-பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன. இன்று ஆரம்பமாகும் இந்த தொடர் எதிர்வரும் மார்ச் 6ம் திகதி வரை இந்தப்போட்டி நடைபெறவுள்ளது.

இன்று தொடங்கும் 14வது ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் தகுதி சுற்றில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 5 அணிகள் மோதவுள்ளன.

இதுவரை 50 ஓவர் கொண்ட ஒருநாள் போட்டியாக நடத்தப்பட்டு வந்த ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடர் இந்த முறை முதல் தடவையாக இருபதுக்கு 20 போட்டியாக நடத்தப்படுகிறது.

1984ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 2014ம் ஆண்டு இறுதியாக நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

அந்தவகையில் இந்தமுறையும் கிண்ணத்தை சுவீகரிக்கும் எதிர்பார்ப்புடன் லசித் மலிங்க தலைமையிலான இலங்கை அணி இந்த தொடரில் களமிறங்குகின்றது.