இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கைது!!

596

arrest (1)

இந்திய கடல் எல்லையில் மீன்பிடியில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் 13 பேர் இந்தியாவில் கைது செய்யப்பட்டிருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.இதேவேளை இலங்கை மீனவர்களின் 09 படகுகள் அந்த நாட்டு பாதுகாப்பு பிரிவினரின் கீழ் இருப்பதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கடந்த புதன்கிழமை இந்திய கடல் எல்லையை தாண்டிய இலங்கைக்கு சொந்தமான இரண்டு படகுகளை 2500 கிலோகிராம் மீன்களுடன் இந்திய பாதுகாப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

இதுவரையில் 27 இந்திய மீனவர்களும் 79 படகுகளும் இலங்கை பாதுகாப்பு பிரிவினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.