மிகவும் பாரம் குறைந்த சோலர் கலத்தினை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை!!

435

solar_cell_002

சூரிய ஒளியினைப் பயன்படுத்தி மின்சக்தியை பெறும் சோலார் படல தொழில்நுட்பமானது தற்போது மூலை முடுக்கு எங்கும் பிரபல்யமாகி வருகின்றது.இத் தொழில்நுட்பத்தில் தற்போது வரை பயன்படுத்தப்பட்டுவரும் படலங்கள் பாரம் கூடியவையாகவே காணப்படுகின்றன.

இப் பிரச்சினைக்கு தீர்வாக சவர்க்கார குமிழினை விடவும் பாரம் குறைந்த சோலார் கலத்தினை தயாரித்து MIT விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.மிகவும் குறைந்த தடிப்பினைக் கொண்டதாக இந்த சோலர் கலம் காணப்பட்ட போதிலும் வினைத்திறனாக மின்னைப் பிறப்பிக்கக்கூடிய வகையில் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதனை அணியும் சேர்ட் முதல் அனைத்து இலத்திரனியல் சாதனங்கள் வரை இணைத்து பயன்படுத்தக்கூடியதாக இருத்தல் விசேட அம்சமாகும்.