
மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனர் ராஜேஸ் பிள்ளை. இவர் இயக்கத்தில் நேற்று தான் மஞ்சு வாரியர் நடித்த வேட்டா படம் திரைக்கு வந்தது.இவர் நேற்று உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து சிகிச்சை பலனின்றி காலை 11.40 மணிக்கு இயற்கை எய்தினார்.இச்சம்பவம் மலையாள திரையுலகத்தினர் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.





