நகைச்சுவை நடிகர் குமரிமுத்து காலமானார்!!

1122

Kumarimuthu

ஊமை விழிகள், முள்ளும் மலரும், பொங்கி வரும் காவேரி, இது நம்ம ஆளு, புது வசந்தம் உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் நடிகர் குமரி முத்து.

சினிமாவில் இவருடைய சிரிப்புதான் மிகப்பெரிய பிரபலம். இவரின் வித்தியாசமான சிரிப்பு அனைவரையும் பயமுறுத்துவது மட்டுமில்லாமல் ரசிக்கவும் வைக்கும்.

சினிமாவில் புகழ்பெற்ற நட்சத்திமாக திகழ்ந்த குமரி முத்து, அரசியல் கட்சியான திமுகவில் இணைந்து நட்சத்திர பேச்சாளராகவும் திகழ்ந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த குமரி முத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு 10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குமரி முத்துவுக்கு வயது 77. மறைந்த குமரி முத்துவின் உடலுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் ஆழந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும், அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர்.