பன்னல – கியவல வீதி பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் கைப்பற்றப்பட்டுள்ளது.
பன்னல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண்ணொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண்ணுக்கு பிறிதொரு ஆணுடன் தொடர்பிருந்ததாகவும், அவரே இந்தக் கொலையை செய்திருக்கலாம் எனவும், ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும், சந்தேகநபர் அப் பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதோடு, அவரைக் கைதுசெய்யும் நடவடிக்கைகளை பன்னல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.