
ஆசியக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் விராட் கோலிக்கு ஐ.சி.சி அபராதம் விதித்துள்ளது.
ஆசியக்கிண்ண டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் மிர்புரில் நடந்தது. இதில் இந்தியா 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கோலி 51 பந்தில் 49 ஓட்டங்கள் குவித்தார்.
இந்தப் போட்டியில் அவர் முகமட் சமி பந்தில் எல்.பி.டபிள்.யூ. முறையில் ஆட்டமிழந்தார். ஆனால் பந்து தனது துடுப்பாட்ட மட்டையில் உரசிச் சென்றதை நடுவரிடம் துடுப்பாட்ட மட்டையை உயர்த்திக் காட்டினார்.
மேலும், சில தகாத வார்த்தைகளையும் அவர் பயன்படுத்தியுள்ளார். இது ஐ.சி.சி.-யின் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது. அவர் தனது தவறை ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், அவருக்கு போட்டி சம்பளத்தில் இருந்து 30 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.





