கள்ளக் காதலனின் உருவத்தில் பிறந்த குழந்தை : கொடூரமாக அடித்து கொலை செய்த தாயார்!!

547

baby_murder_003

கள்ளக் காதலனின் தோற்றத்தில் குழந்தை பிறந்ததால், தன்னுடைய ரகசிய காதல் அம்பலமாகிவிடும் என்ற அச்சத்தில் குழந்தையை கொடூரமாக கொன்ற தாயாருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

ரோமானியா நாட்டில் உள்ள Barlad என்ற நகரில் எலினா ஸ்மோகட்(27) என்ற தாயார் தனது 4 வயது மகனுடன் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் அடிக்கடி வெளியூர் செல்வதால், யாருக்கும் தெரியாமல் நபர் ஒருவருடன் ரகசிய உறவில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், எலினா மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். 2012ம் ஆண்டு இவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. சில நாட்களுக்கு பிறகு, தனது 4 வயது மகனின் உருவத்தையும், தனக்கு புதிதாக பிறந்த மகனின் உருவத்தையும் ஒப்பிட்டு பார்த்தபோது அதிர்ச்சி அடைந்துள்ளார்.

புதிதாக பிறந்த மகன் தன்னுடைய கள்ளக்காதலனின் உருவத்தில் இருந்ததால் ‘தன்னுடைய ரகசிய காதல் கணவருக்கும் உறவினர்களுக்கும் தெரிந்துவிடுமோ’ என்ற அச்சம் எலினாவை பெரிதும் பாதித்துள்ளது.

இதிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள ஒரு நாள் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற எலினா, புதிதாக பிறந்த ஆண் குழந்தையின் இரு கால்களை பிடித்து தூக்கி அருகில் உள்ள அலமாரி மீது கொடூரமாக தாக்கியுள்ளார்.

இதில் குழந்தையின் தலை அலமாரி மீது மோதி சிதறியுள்ளது. உடனே, குழந்தையை குளியலறைக்கு தூக்கி சென்ற எலினா, அதன் வயிற்றை கத்தியால் குத்தி கிழித்து குடல்களை வெளியே எடுத்து பொட்டலமாக கட்டி மறைத்து வைத்துள்ளார்.

ஆனால், எலினாவின் இந்த கொடூரமான செயல்கள் அருகில் குடியிருந்தவர்கள் மூலம் பொலிசாருக்கு தெரியவர அதே ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. தான் செய்த குற்றங்களை எலினா ஒப்புக்கொண்டதால், அவருக்கு 18 வருடங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

1 2