சுற்றுலா வீசாவில் வந்து வர்த்தகம் செய்த இந்தியர் பெருந்தொகைப் பணத்துடன் கைது!!

536

Arrest1

சுற்றுலா வீசாவில் இலங்கை வந்து வர்த்தகத்தில் ஈடுபட்ட இந்தியர் ஒருவர் பெருந்தொகைப்பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பிரதேசத்தில் வைத்து குறித்த இந்தியப் பிரஜை ஆயத்த ஆடைகள் விற்பனையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

37 வயதான குறித்த நபர் கைது செய்யப்படும்போது சுமார் இரண்டரை லட்சம் ரூபா பணம் வைத்திருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குடிவரவுச் சட்டங்களை மீறிய குற்றத்தின் பேரில் இன்று அவர் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.