
கல்கிஸ்ஸ பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த இரண்டு பெண்களை கல்கிஸ்ஸ பொலிஸார் நேற்றைய தினம் கைதுசெய்துள்ளனர்.56 வயதான குறித்த பெண்ணிடம் இருந்து 3 கிராம் 570 மில்லிகிராம் ஹெரோயினை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதேவேளை கல்கிஸ்ஸ பெலக்கடே என்ற இடத்தைச் சேர்ந்த 33 வயது பெண் ஒருவரையும் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த பெண்ணிடம் இருந்து 2 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயினை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் இந்த சந்தேக நபர்கள் இருவரையும் இன்றைய தினம் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவுள்ளதாக கல்கிஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





