ஆசிய கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா- வங்கதேச அணிகள் இன்று மோதவுள்ளன. இதனையொட்டி வங்கதேச ரசிகர்கள் மிக மோசமாக விமர்சனங்கள் செய்து வருகின்றன.
இந்திய அணித்தலைவர் மகேந்திர சிங் டோனியின் தலையை வங்கதேச வீரர் தஸ்கின் அகமட் வெட்டி எடுத்துச் செல்வது போன்ற புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.
இறுதிப் போட்டியில் நுழைந்ததை கொண்டாடுவதற்காக வங்கதேச ரசிகர் ஒருவர் இப்புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதற்கு முன்பாக பாகிஸ்தானை தோற்கடித்து வங்கதேசம் இறுதிச்சுற்றுக்குள் நுழைந்ததை கொண்டாடும் விதமாக பாகிஸ்தானை கிண்டலடித்து புகைப்படங்களை வெளியிட்டனர்.
வங்கதேச ரசிகர்கள் இவ்வாறு மோசமாக நடந்து கொள்வது புதிதல்ல, இதற்கு முன்பாக கடந்தாண்டு இந்தியா வங்கதேசத்திடம் தோற்ற போது “Mustafizur cutter” என்ற பெயரில் புகைப்படத்தை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.