ஆண்களின் இனவிருத்தி ஆற்றல் பாதிக்கப்படுவதை தடுக்கும் உள்ளாடை!!

479

sperm_inventon_002

காற்சட்டைப் பைக்குள் வைக்கப்படும் கையடக்கத்தொலைபேசிகளிலிருந்து வெளிவரும் மின்காந்த கதிர்வீச்சால் ஆண்களின் இனவிருத்தி ஆற்றல் பாதிக்கப்படுவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்ற நிலையில், மேற்படி மின்காந்த கதிர்வீச்சிலிருந்து பாதுகாப்பைத் தரும் உள்ளாடையொன்றை ஜேர்மனிய ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர்.

23 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான ‘கிறவுண் ஆபரண உள்ளாடை’ என அழைக்கப்படும் இந்த உள்ளாடை கதிர்வீச்சைத் தடுக்கக் கூடிய வகையில் வெள்ளி உலோக நாரால் பின்னப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. முனிச் வர்த்தகப் பாடசாலையைச் சேர்ந்த பீர் போய் மத்தியஸென் ( 34 ), டானியல் ஹேர்டர் ( 31), நிக் கியபென்பேர்க் ( 31 ) மற்றும் பெர்னோ டெலியஸ் ( 31) ஆகிய ஆராய்ச்சித் துறை மாணவர்கள் கூட்டிணைந்து இந்த உள்ளாடையை வடிவமைத்துள்ளனர்.

மேற்படி உள்ளாடையில் வெள்ளி நார் அதி தொழில்நுட்ப செயற்கிரமங்கள் மூலம் உடலுக்கு இதமளிக்கக் கூடிய வகையில் மென்மையானதாக மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.