மூன்று வயது மகளை துஷ்பிரயோகம் செய்த கொடூர தந்தை!!

429

bigstockphoto_sad_young_blonde_child_6544846

நுவரெலியா – தெரிபெஹெ பிரதேசத்தில் 3 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த குழந்தையின் தந்தையால் இந்த குற்றசெயல் இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக தாயின் பாதுகாப்பில் இருந்த குழந்தையை சந்தேக நபர் தூக்கி சென்றுள்ளார். பின்னர் சந்தேக நபர் பல மாதங்களாக குறித்த குழந்தையை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது குழந்தை மருத்துவ பரிசோதனைக்காக நுவரெலிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர், நுவரெலிய காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.