
இலங்கையில் கனிய எண்ணெய் அகழ்வு செய்ய முடியுமா என்பது குறித்து ஆராய்வதற்கு இரண்டு அமெரிக்க நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலகின் முதல் நிலையான இரண்டு அமெரிக்க நிறுவனங்களே இவ்வாறு விருப்பம் வெளியிட்டுள்ளன.
எக்சொன் மொபில் மற்றும் லெம்பர்ட் ஒயில் ஆகிய நிறுவனங்களே இவ்வாறு இலங்கையில் கனிய எண்ணெய் அகழ்வு குறித்த ஆய்வுகளில் ஈடுபட விருப்பம் வெளியிட்டுள்ளன. இதேவேளை, கிழக்கு கடற்கரைப் பகுதியில் ஏற்கனவே பிரான்ஸ் நிறுவனமொன்று கனிய எண்ணெய் வள ஆய்வுகளை மேற்கொள்ள ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளது.
கனிய எண்ணெய் அகழ்வு ஆய்வு தொடர்பில் விரைவில் இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, இலங்கை கனிய எண்ணெய் வள ஆய்வுகள் குறித்து இந்தியாவும் சீனாவும் ஆர்வம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





