
மெதிரிகிரிய – அம்பகெஸ்வெவ பகுதியிலுள்ள கட்டடம் ஒன்றின் இரண்டாவது மாடியிலிருந்து விழுந்து 13 வயது சிறுவனொருவர் உயிரிழந்துள்ளார்.
புதிதாக கட்டிக்கொண்டிருக்கும் கட்டடமொன்றில் வேறு சிலருடன் இருந்த வேளையே அவர் கீழே விழுந்துள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது படுகாயமடைந்த அவர் மெதிரிகிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சடலம் தொடர்பான பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதோடு, மெதிரிகிரிய பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





