இரவுவேளைகளில் நாம் அதிகளவு வெப்பத்தை உணர்வது ஏன் என்று தெரியுமா?

378

Heat

பகலை விட இரவு சூடாக மாறிவருவதன் மர்மம் என்ன என்பதை நோர்வே விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதமான, குளிர்ச்சியான இரவுகள், கடந்த 50 ஆண்டுகளில் பகலை விட சூடாக மாறிவருகிறது. அதுவும் மிக வேகமாக. இந்த மாற்றத்திற்கான காரணம் தொடர்பாக நோர்வே விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

பூமியை சூழ்ந்திருக்கும் வளிமண்டலம் பல அடுக்குகளை கொண்டது. அதில் பூமியின் மேல்தளத்தை சூழ்ந்திருக்கும் வளிமண்டலமானது பகலில் சில கிலோ மீட்டர் உயரத்திற்கு உள்ளது. ஆனால் இரவு நேரத்தில் இது சில நூறு மீட்டர்களாக சுருங்கிவிடுகிறது.

எனவே இரவு நேரத்தில் வெளியாகும் காபனீரொட்சைட் காரணமாக காற்று வேகமாக வெப்பமடைகின்றது. இது தான் இரவின் வெப்பநிலை வேகமாக உயர்ந்து வருவதற்கான காரணம் என்பதை நோர்வே விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

காபனீரொட்சைட் வெளிப்பாட்டை குறைக்காமல் பூமியின் வெப்பநிலை உயர்வை கட்டுப்படுத்தவோ குறைக்கவோ முடியாது என ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.