டென்னிஸ் வீராங்கனையை மணந்த ரொபின் உத்தப்பா!!

426

Robin Uthappa

இந்திய கிரிக்கெட் வீரராக இருந்து வருபவர் ரொபின் உத்தப்பா. இவர் கடந்த 2007ம் ஆண்டு 20 ஓவர் கிரிக்கெட் உலக கிண்ணத்தை வென்ற இந்திய அணியில் முக்கிய இடம் வகித்தவர் ஆவார். இந்திய அணியில் முதல் தர வரிசை துடுப்பாட்ட வீரராகவும், பகுதி நேர சுழற்பந்து வீச்சாளராகவும் இவர் விளையாடி இருக்கிறார்.

தற்போது அவர் ரஞ்சி கிரிக்கெட்டிலும், ஐ.பி.எல். கிரிக்கெட்டிலும் விளையாடி வருகிறார். இவரது சொந்த ஊர் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகாவில் உள்ள சுண்டிகொப்பா என்ற கிராமம் ஆகும்.

இந்த நிலையில், கிரிக்கெட் வீரர் ரொபின் உத்தப்பாவுக்கும், டென்னிஸ் வீராங்கனை சீத்தலுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் கர்நாடக மாநிலம் குடகில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நடைபெறுவதாக இருந்தது. திருமணத்திற்கான ஏற்பாடுகளை இரு குடும்பத்தாரும் செய்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை குடகில் உள்ள தனியார் ஹோட்டலில் ராபின் உத்தப்பாவுக்கும், சீத்தலுக்கும் திருமணம் நடந்தது. திருமணம் குடகு மாவட்ட வழக்கப்படி கங்கா பூஜையுடன் நடந்தது. திருமணத்திற்கு பிறகு வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது. இந்த திருமண விழாவில் ஏராளமான கிரிக்கெட் மற்றும் டென்னிஸ் வீரர்கள், வீராங்கனைகள், ராபின் உத்தப்பாவின் நண்பர்கள், அவரது குடும்பத்தார், சீத்தலின் குடும்பத்தார், அவரது தோழிகள், அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.