
காதல் விவகாரத்தால் மனமுடைந்த ஜெமினி மியூசிக் சனல் நிகழ்ச்சித் தொகுப்பாளர் நிரோஷா, கனடாவில் உள்ள தனது காதலரோடு வீடியோ அழைப்பில் பேசிக் கொண்டே, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.தெலுங்குத் தொலைக்காட்சியான ஜெமினி மியூசிக்கில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் நிரோஷா. கந்திராபாத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிரோஷா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
துறுதுறு பேச்சு, அழகு என தெலுங்கு தொலைக்காட்சி வட்டாரத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சித் தொகுப்பாளராக வலம்வந்த நிரோஷாவின் இந்த திடீர் முடிவு தெலுங்கு சின்னத்திரை வட்டாரத்தை அதிர்ச்சி அடையச் செய்தது.
இதற்கு முன்பு ஒரு தெலுங்கு செய்தி தொலைக்காட்சியில், பத்திரிக்கையாளராக பணியாற்றிய நிரோஷா, அண்மையில் தான் ஜெமினி டிவியில் தொகுப்பாளராக சேர்ந்தார். நிரோஷாவின் காதலர் பெயர் ரித்விக் என்றும், அவர் கனடாவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அடுத்தமாதம் நிரோஷாவிற்கு திருமணம் நடைபெற இருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் தான் திடீரென தற்கொலை முடிவை நாடியுள்ளார் நிரோஷா. நிரோஷாவின் இந்த துயர முடிவிற்குக் காரணம் காதல் விவகாரம் தான் எனக் கூறப்பட்டது.தற்போது அதனை நிரூபிப்பதுபோல், தனது காதலருடன் ஸ்கைப் மூலம் வீடியோ அழைப்பில் பேசியவாறே, நிரோஷா தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. அதோடு, கடந்த சில நாட்களாக தீவிர மன அழுத்தத்தில் இருந்துள்ளார் நிரோஷா.
அதே மனநிலையில் தனது காதலருடன் வீடியோ அழைப்பு ’ மூலம் பேசி உள்ளார் நிரோஷா. அப்போது தனது காதலரிடம் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.அதோடு, சொன்னபடி தூக்கிட்டும் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது காதலர் உடனடியாக நிரோஷாவின் பெற்றோருக்கும், அவர் தங்கியிருந்த விடுதிக்கும் தகவல் கொடுத்துள்ளார்.
பின்னர் விடுதி ஊழியர்கள் நிரோஷாவின் அறைக்கதவை தட்டியும் திறக்காததால், போலீசாரின் உதவியுடன் அறைக்கதவை உடைத்து, அவரது சடலத்தை மீட்டுள்ளனர். இதுகுறித்து ராம்கோபால் பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து, நிரோஷாவின் செல்போன் அழைப்புகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.





