1 கோடியில் ஆரம்பரக் கார் : புதிய சர்ச்சையில் சிக்கிய டோனி!!

524

Dhoni

டி20 உலகக்கிண்ண தொடரில் விளையாடி வரும் இந்திய அணித்தலைவர் டோனி புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

கார், பைக் பிரியரான டோனி, கடந்த 2009ல் ரூ.1 கோடி மதிப்புள்ள ‘ஹமர் எச்2’ என்ற ‘ஸ்போர்ட்ஸ்’ கார் ஒன்றை வாங்கினார். இதை ராஞ்சியின் போக்குவரத்து துறை அலுவலகத்தில் பதிவு செய்தார்.

அப்போது ‘ஹம்மர்’ என்ற பெயருக்கு பதிலாக ‘ஸ்கார்பியோ’ என தவறுதலாக பதிவு செய்யப்பட்டது. இதனால் 4 லட்சத்திற்கு பதில் 53 ஆயிரம் மட்டும் வரியாக செலுத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது உண்மை கண்டுபிடிக்கப்பட்டதால் 2010 முதல் தற்போது வரை வரியை அபராதத்துடன் கட்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ராஞ்சி போக்குவரத்து அதிகாரி நாகேந்திர பவான் கூறுகையில், டோனியின் ‘ஹமர் வகை கார் வெளிநாட்டை சேர்ந்தது. இது போக்குவரத்து துறையின் பட்டியலில் இல்லை.

மேலும், இதை ‘ஸ்கார்பியோ’ எனவும் தவறாக பதிந்து விட்டனர். இதனால் போக்குவரத்து விதிப்படி அவர் அபராதத்துடன் வரியை கட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.