பந்தை எறிகிறார்கள் : வங்கதேச வீரர்கள் தஸ்கின், சன்னிக்கு இடைக்காலத் தடை!!

434

Ban

வங்கதேச பந்துவீச்சாளர்களான தஸ்கின் மற்றும் அராபத் சன்னிக்கு இடைக்கால நீக்கம் செய்யப்பட்டுள்ளது வங்கதேச அணியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேச பந்துவீச்சாளர்கள் தஸ்கின் அகமது (வேகம்), அராபத் சன்னி (சுழல்) இருவரது பந்துவீச்சும் எறிவது போல் உள்ளதாக நடுவர்கள் புகார் செய்தனர்.

இதைத் தொடர்ந்து, அவர்களது பந்துவீச்சு பாணி குறித்து சென்னையில் உள்ள ஐசிசி அங்கீகாரம் பெற்ற மையத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், அனுமதிக்கப்பட்ட 15 டிகிரி அளவை விட முழங்கை கூடுதலாக வளைவதாக கண்டறியப்பட்டது.

இதனால் தஸ்கின், சன்னி இருவரும் சர்வதேச போட்டிகளில் இருந்து உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவதாக ஐசிசி நேற்று அறிவித்தது.
அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை சேர்க்க வங்கதேச அணிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முன்னணி பந்துவீச்சாளர்களான இவர்களுக்கு விதிக்கப்பட்ட திடீர் தடையால், வங்கதேச அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.