
கந்தான, நாகொட பகுதியில் தனது ஆறு வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தையை தேடி விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 9 ஆம் திகதி குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் குறித்த பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரை கைது செய்வதற்கான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளாதகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் மது போதைக்கு அடிமையானவர் என அவரின் மனைவியானால் வழங்கப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.





