வவுனியாவில் உலக நீர் தினத்தை முன்னிட்டு வீதியோட்டப்போட்டி!!

583

 
உலக நீர் தினத்தை முன்னிட்டு யுனோப்ஸ் நிறுவனத்தின் அனுசரனையில் வவுனியா நகரசபையின் ஒழுங்கமைப்பில் வீதியோட்டப்போட்டி நடைபெற்றது.

வவுனியா நகரசபை செயலாளர் தர்மேந்திராவினால் கொடியசைத்து ஆரம்பித்து வைத்த இப்போட்டியானது வவுனியா நகரசபையில் இருந்து ஆரம்பமாகி இறம்பைக்குளம் பாடசாலை வழியாக வைத்தியசாலை சுற்றுவழி, பூங்கா வீதியின் வழியாக வவுனியா நகரசபையில் நிறைவு பெற்றது.

இவ் வீதியோட்டப்போட்டியில் வயது வேறுபாடு இன்றி அனைத்து வயதினரும் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

DSC02025 DSC02026 DSC02031 DSC02032