வவுனியாவில் சுட்டெரிக்கும் வெயில் : இலங்கையிலேயே அதிகளவான 36.6 செல்சியஸ் பதிவு!!

1284

Vavuniya

கடந்த சில வாரங்களாக வவுனியாவில் கடும் வெயில் மக்களை வாட்டி எடுத்து வருகின்றது. மிகவும் வறட்சியான காலநிலை நிலவுவதுடன் வெயிலின் அளவு கடந்தாண்டுகளை விட அதிகமாகவே காணப்படுகின்றது.

இதனால் குழந்தைகள் முதியோர் உட்பட தொழிலின் நிமித்தம் வெளியே செல்வோரும் வெயிலின் வெப்பத்தை தாங்கமுடியாமல் கடும் சிரமங்களுக்கும் முகம்கொடுக்கின்றனர்.

இன்று இலங்கையிலேயே அதிகளவாக வவுனியாவில் 36.6 பாகை செல்சியஸ் வெப்பநிலை காணப்படுவதாகவும்,அனுராதபுரத்தில் 35 பாகையும், கொழும்பில் 32 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருப்பதாகவும் காலநிலை மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்த வெப்பக் காலநிலையானது எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் எனவும் காலநிலை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த நாட்களில் மக்கள் அதிகமாக நீர் பருகவேண்டும் எனவும், 15 நிமிடங்களுக்கு ஒரு தடவை கட்டாயம் நீர் பருக வேண்டும் என்றும் காலநிலை மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.