
மசாஜ் நிலையங்களை கட்டுப்படுத்துவதற்காக புதிய சட்டமூலம் கொண்டு வரப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.மசாஜ் நிலையங்களை சோதனையிடுவது தொடர்பில் பிரச்சினைகள் இருப்பதால், புதிய சட்டமூலத்தை கொண்டு வரவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
சுகாதார கல்வி பணியகத்தில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.குறித்த சட்டமூலம் தொடர்பான வரைவு சட்ட வரைவு திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில், குறுகிய காலத்திற்கு சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர், மசாஜ் நிலையங்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மஹிபால குறிப்பிட்டுள்ளார்.





