
75 இலட்சம் ரூபா பெறுமதியான வௌிநாட்டு நாணயங்களுடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QL 669 என்ற விமானத்தில் ஸார்ஜா நகரம் நோக்கி செல்ல முற்பட்ட போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக விமான நிலைய செய்தியாளர் கூறினார்.
சந்தேகநபர் 44 வயதுடைய இந்தியப் பிரஜை என தெரிய வந்துள்ளது. விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.





